Saturday, October 1, 2011

அறிமுகம்

புதிய தமிழர் இணைய தளம் இன்றைய இளைஞர்களின் எண்ணத்தில் உருவாக்கம் பெறுகின்றது. 
இன்றையதமிழ் சமூகத்தின் நிலையறிந்து ஒவ்வொரு தமிழர்களும் செயற்பட வேண்டிய தருணம் இது. அந்த வகையில் இராமர் அணை கட்டுவதற்கு அணில் மண் சுமந்தது போல சமூகத்தினை புதிய பரிணாமத்திற்கு இட்டுச் செல்வதற்கு புதிய தமிழர் இணைய தளம் தன்னால் முடிந்த சிறு பங்கினை ஆற்ற விளைகின்றது. 


சமுதாய மட்டத்தில் பல்வேறு தள நிலைகளிலிருந்து சமூகத்தின் தேவைப்பாடுகளை உணர்ந்து இத்தளம் பரிணமிக்கின்றது. 
சமூக,கலாச்சார,அரசியல்  மற்றும் பண்பாடு ஆகியவைகளை பல்வேறு மட்டங்களில் நடுநிலையாக மக்களுக்கு சென்றடையச் செய்வதே 'புதிய தமிழர்" இன் இலக்கு. 


தமிழர்கள் தமது உரிமையையும் தமது கலாச்சார பண்பாட்டு அடையாளங்களையும் நிலைநிறுத்தும் அதே வேளை இன நல்லினக்கத்தை ஏற்படுத்தக்கூடியவாறு புதிய தமிழர்களை 
உருவாக்குவதே எமது நோக்கமாகும்.


இத்தளம் முதலில் .blogspot.com. ஆக நடைமுறைப்படுத்தி உங்கள் ஆதரவைப் பெற்று ..com வலையமைப்பாக மாற்ற திட்டமிட்டுள்ளோம். 




நன்றி.
புதிய தமிழர் நிர்வாகம்.